தரை பாலத்தை சீரமைக்க கோரி பொதுமக்கள் சாலை மறியல்
திருவெண்ணெய்நல்லுார் திருவெண்ணெய்நல்லுார் அருகே தரைப் பாலத்தை சீரமைக்க வலியுறுத்தி பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.திருவெண்ணைநல்லுார் அடுத்த கண்ணாரம்பட்டு கிராமத்தில் கடந்த 50 ஆண்டுகளுக்கு முன் அப்பகுதியில் உள்ள மலட்டாற்றின் குறுக்கே தரைப்பாலம் கட்டப்பட்டது. அப்பாலம் கடந்த 2ம் தேதி ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் அடித்து செல்லப் பட்டது.இதனால் கிராமத்தில் உள்ள பள்ளி மாணவர்கள், வெளியூர் வேலைக்கு செல்பவர்கள், அத்தியாவசிய பொருட்கள் வாங்க செல்பவர், என ஐந்து கி.மீ., சுற்றி செல்ல வேண்டிய சூழல் நிலவி வருகிறது. இந்நிலையில் அப்பாலத்தை அகற்றிவிட்டு மேம்பாலம் அமைக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் பல ஆண்டுகளாக கோரிக்கை விடுத்திருந் தனர்.அதிகாரிகள் நடவடிக்கை எடுக்காததால் அப்பகுதி மக்கள். நேற்று காலை 10:00 மணி அளவில் திருவெண்ணெய்நல்லுார் - அரசூர் சாலை சாராயமேடு பஸ் நிறுத்தத்தில் சாலை மறியலில் ஈடுபட்டனர்.தகவல் அறிந்த திருவெண்ணெய்நல்லுார் இன்ஸ்பெக்டர் மைக்கேல் இருதயராஜ் தலைமையிலான போலீசார் மற்றும் அதிகாரிகள் போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்களிடம் விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் எனக்கூறி உறுதியளித்ததை தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் 11:00 மணி அளவில் கலைந்து சென்றனர். இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு நிலவியது.