உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / அரசு கலைக் கல்லுாரியில் பொது கலந்தாய்வு துவக்கம்

அரசு கலைக் கல்லுாரியில் பொது கலந்தாய்வு துவக்கம்

விழுப்புரம்; விழுப்புரம் அறிஞர் அண்ணா அரசு கலை மற்றும் அறிவியல் கல்லுாரியில், இந்தாண்டு மாணவர் சேர்க்கைக்கான பொது கலந்தாய்வு நேற்று துவங்கியது.அதனையொட்டி, காலை 9:30 மணிக்கு பி.ஏ., தமிழ் ஷிப்டு 1க்கு கட் ஆப் மதிப்பெண் 100 முதல் 87 வரை நடந்தது. 11:30 மணிக்கு பி.ஏ., தமிழ் ஷிப்டு 2க்கு கட் ஆப் மதிப்பெண் 100 முதல் 80 வரை நடந்தது.கலந்தாய்வுக்கு வந்த மாணவ, மாணவியர்களின் அசல் சான்றிதழ்களை, பேராசிரியர்கள் ஆய்வு செய்தனர். தொடர்ந்து, மாணவர்களின் கட் ஆப் மதிப்பெண்களை கல்லுாரி துறை தலைவர்கள் ஆய்வு செய்து, அவர்கள் குறிப்பிட்ட பாடத்தில் அட்மிஷன் ஆவதற்காக ஆன்லைன் பிரிவிற்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.இந்த பொது கலந்தாய்வை, கல்லுாரி முதல்வர் சிவக்குமார் ஆய்வு செய்தார். உடற்கல்வி இயக்குனர் ஜோதிபிரியா உட்பட பேராசிரியர்கள் உடனிருந்தனர்.கலந்தாய்வில், 350 மாணவ, மாணவிகள் பங்கேற்றனர். தொடர்ந்து, இன்று 5ம் தேதி காலை 9:30 மணிக்கு பி.ஏ., ஆங்கிலம் ஷிப்டு 1க்கு கட் ஆப் மதிப்பெண் 100 முதல் 63 வரையிலும், 11:30 மணிக்கு இதே பாடப்பிரிவு ஷிப்டு 2க்கு கட் ஆப் மதிப்பெண் 100 முதல் 53 வரை நடக்கிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை