உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / பொது வினியோக திட்ட குறைதீர் முகாம்

பொது வினியோக திட்ட குறைதீர் முகாம்

விழுப்புரம்: மாவட்டத்தில், பொது வினியோக திட்ட சேவைகள், ரேஷன் பதிவில் திருத்த பணிகளுக்கான குறைதீர் முகாம் நேற்று நடந்தது.விழுப்புரம் தாலுகா அலுவலகத்தில் நடந்த முகாமில் குடிமை பொருள் தனி தாசில்தார் ஆனந்தன் பங்கேற்று, பொது மக்களிடம் மனுக்களை பெற்றார்.முகாமில், ரேஷன் அட்டைகளில் பெயர் சேர்த்தல் பெயர் நீக்கம், முகவரி மாற்றம், மொபைல் எண் மாற்றம், புதிய அட்டை கோருதல் மனுக்கள் பதிவு செய்தல் உள்ளிட்ட பணிகள் நடந்தன.பொது வினியோக திட்ட செயல்பாடுகள், அத்தியாவசிய பொருட்களின் தரம் குறித்த புகார் மனுக்களும் பெறப்பட்டன. 9 தாலுகாவிலும் இந்த குறைதீர் முகாம் நடந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ