மேலும் செய்திகள்
ரத்தாகும் நிலையில் இலவச மனை பட்டா
01-Mar-2025
விழுப்புரம் : குண்டலப்புலியூரில், பொது இடத்தில் முறைகேடாக வழங்கிய மனைப் பட்டாக்களை ரத்து செய்ய வேண்டுமென, கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.குண்டலப்புலியூர் ஆதிதிராவிடர் பகுதி மக்கள், கலெக்டர் அலுவலகத்தில் அளித்த மனு:குண்டலிபுலியூரில் வீடற்ற, நிலமற்ற ஏழை ஆதிதிராவிட சமூகத்தினர் சிலருக்கு, வீட்டு மனைப்பட்டாக்கள் வழங்கப்பட்டது. அதில், கிராம பொது பயன்பாட்டிற்காகவும், விளையாட்டு திடலுக்காகவும் விடப்பட்ட இடத்தினை, கிராம நிர்வாகத்தினர் சிலர், வசதி படைத்தவர்களுக்கு, பொது இடத்தில் முறைகேடாக, மனைப்பட்டா வாங்கி கொடுத்துள்ளனர். இது குறித்து நடவடிக்கை எடுத்து, முறைகேடாக வழங்கிய மனை பட்டாக்களை ரத்து செய்யவேண்டும்.இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.
01-Mar-2025