உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / நீர் வரத்து வாய்க்கால் மண் கொட்டி தடுப்பு திண்டிவனத்தில் பொது மக்கள் மறியல்

நீர் வரத்து வாய்க்கால் மண் கொட்டி தடுப்பு திண்டிவனத்தில் பொது மக்கள் மறியல்

திண்டிவனம் : வெள்ளவாரி வாய்க்கால் நீர் வரத்தை தடுப்பதை கண்டித்து, திண்டிவனம் - செஞ்சி சாலையில் பொது மக்கள் மறியலில் ஈடுபட்டனர்.திண்டிவனம் - செஞ்சி சாலையில் காந்தி நகர் எதிரே தனியார் கட்டடம் கட்டும் பணி நடக்கிறது. இதற்காக சாலையையொட்டியுள்ள வெள்ளவாரி வாய்க்காலில் மண்ணைக் கொட்டி மூடிவிட்டு பணி நடப்பதாக, அப்பகுதி மக்கள் கடந்த 3 நாட்களுக்கு முன் தாசில்தாரிடம் புகார் மனு அளித்தனர்.இந்நிலையில் நேற்று காலை 11:30 மணியளவில் திண்டிவனம் - செஞ்சி சாலையில் காந்தி நகர் பகுதியில் முன்னாள் கவுன்சிலர்கள் அய்யப்பன், ராஜேந்திரன் தலைமையில் திருவேங்கடம், ரகுபதி காந்தி நகர் பகுதியைச் சேர்ந்த 50க்கு மேற்பட்டோர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.தகவலறிந்து சம்பவ இடத்திற்குச் சென்ற ரோஷணை சப் இன்ஸ்பெக்டர் ஆனந்தராசன், தாசில்தார் சிவா, நகராட்சி மேலாளர் நெடுமாறன் ஆகியோர் மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.அதில், திண்டிவனம் சப் கலெக்டர் தலைமையில் இருதரப்பையும் அழைத்து சமாதானம் கூட்டம் நடத்தி முடிவு எடுக்கப்படும் என தெரிவித்ததன் பேரில் 11:45 மணியளவில் மறியலை விலக்கிக் கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை