உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / நிவாரணம் வழங்க கோரி பொதுமக்கள் மறியல்

நிவாரணம் வழங்க கோரி பொதுமக்கள் மறியல்

மயிலம் : மயிலம் அருகே வெள்ள நிவாரணம் வழங்கக்கோரி கிராம மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.மயிலம் அடுத்த தழுதாளி கிராமத்தில் வெள்ள நிவாரண தொகை வழங்கக்கோரி கிராம மக்கள் சாலை மறியல் போராடத்தில் ஈடுபட்டனர்.மயிலம் அடுத்த தழுதாளி கிராமத்தில் புயல் மழையினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அரசு சார்பில் நிவாரண உதவித்தொகை வழங்க வேண்டும் என 100க்கும் மேற்பட்டோர் அப்பகுதியில் நேற்று காலை 9:30 மணிக்கு மறியலில் ஈடுபட்டனர்.தகவல் அறிந்து வந்த டி.எஸ்.பி., பிரகாஷ், தாசில்தார் சிவா ஆகியோர் கிராம மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி, நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்ததன் பேரில், 9:40 மணியளவில் கலைந்து சென்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை