மக்கள் தொடர்பு திட்ட முகாம் ரத்து
விழுப்புரம் :வெங்கந்துாரில் இன்று நடக்க இருந்த மக்கள் தொடர்பு திட்ட முகாம் நிர்வாக காரணங்களுக்காக ரத்து செய்யப்பட்டுள்ளது.கலெக்டர் அலுவலக செய்திக்குறிப்பு;திண்டிவனம் தாலுகா, வெங்கந்துார் கிராமத்தில் இன்று 25ம் தேதி உங்களைத்தேடி உங்கள் ஊரில் திட்டம் மற்றும் மக்கள் தொடர்பு திட்ட முகாம் கலெக்டர் தலைமையில் நடப்பதாக அறிவிக்கப்பட்டது. நிர்வாக காரணங்களுக்காக இம்முகாம் ரத்து செய்யப்பட்டுள்ளது. மாற்று தேதி பின்னர் அறிவிக்கப்படும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.