உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / புதுச்சேரி மது கடத்தல் வந்தவாசி வாலிபர் கைது

புதுச்சேரி மது கடத்தல் வந்தவாசி வாலிபர் கைது

திண்டிவனம் : திண்டிவனம் அருகே காரில் மது பாட்டில்களை கடத்திய வாலிபரை போலீசார் கைது செய்தனர். திண்டிவனம் கலால் இன்ஸ்பெக்டர் பாலமுரளி மற்றும் போலீசார் நேற்று மாலை 3:00 மணிக்கு, மயிலம் பெரும்பாக்கம் செக் போஸ்டில் வாகன சோதனை நடத்தினர். புதுச்சேரியிலிருந்து திண்டிவனம் நோக்கி வந்த இண்டிகா காரை நிறுத்தி சோதனை செய்தனர்.அதில், 92 குவாட்டர் புதுச்சேரி மது பாட்டில்கள் கடத்தி வந்தது தெரியவந்தது. விசாரணையில், வந்தவாசி அடுத்த பொன்னுார் கிராமத்தைச் சேர்ந்த கோகுல்ராஜ், 24; என தெரியவந்தது. உடன் அவரை போலீசார் கைது செய்து கார் மற்றும் மது பாட்டில்களையும் பறிமுதல் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி