மேலும் செய்திகள்
ஆயுதப்படை மைதானத்தில் ஆயுதங்கள் ஆண்டு தணிக்கை
21-Sep-2024
விழுப்புரம் ஆயுதப்படைக்கு தண்டனையாக வந்த போலீஸ்காரர்கள் காலக்கெடு முடிந்தும் ஸ்டேஷனுக்கு திரும்ப முடியாமல் சிரமப்பட்டு வருகின்றனர்.விழுப்புரம் காகுப்பம் பகுதியில், காவல் துறைக்கான ஆயுதப்படை மைதானம் உள்ளது. இங்கு, போலீசாருக்கான பயிற்சி பள்ளி மற்றும் ஆயுதப்படை காவலர்கள் பணிபுரியும் அலுவலகம் மற்றும் இவர்களுக்கான குடியிருப்புகள் உள்ளது.இங்குள்ள காவலர்கள் 200க்கும் மேற்பட்டோர் பணியில் உள்ள நிலையில், சட்டம், ஒழுங்கு பிரிவு போலீஸ் ஸ்டேஷன்களில் பணிபுரியும் போலீசார், யாராவது ஒழுங்கீன செயல்களில் நடைபெற்றால் தண்டனையாக ஆயுதப்படைக்கு உயர் அதிகாரிகள் மூலம் மாற்றம் செய்வது வழக்கமாகும்.காகுப்பம் ஆயுதப்படையில் தற்போது 17 போலீஸ்காரர்கள் ஒழுங்கீன நடவடிக்கையில் ஈடுபட்டதாக உள்ளனர். இவர்கள் பல மாதங்களாக இருந்தும், வேறு போலீஸ் ஸ்டேஷன் பணிக்கு மாற்றப்படாமல் உள்ளனர். இவர்கள் பாதுகாப்பு பணிகளுக்கு, சிறைச்சாலை, வெளி மாவட்டங்களுக்கு செல்வதால் மனஉளைச்சலில் இருந்து வருகின்றனர். --நமது நிருபர்--
21-Sep-2024