உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / தொடர் மழையால் தேங்கிய மழைநீர்

தொடர் மழையால் தேங்கிய மழைநீர்

விழுப்புரம்; விழுப்புரத்தில் நள்ளிரவு பெய்த மழையால் சாலையில் மழை நீர் தேங்கியது. மாவட்டத்தில், விழுப்புரம் உள்ளிட்ட பல இடங்களில், நேற்று முன்தினம் அதிகாலை 5:30 மணிக்கு துவங்கி, ஒரு மணி நேரம் பலத்த மழை பெய்தது. இதே போல், நேற்று அதிகாலை 3:30 மணிக்கு மீண்டும் பலத்த மழை பெய்தது. ஒரு மணி நேரம் வரை விட்டு, விட்டு பரவலாக மழை பெய்தது. விழுப்புரத்தில் தொடர்ந்து, இரண்டு நாட்களாக, மழை பெய்ததால், பல்வேறு இடங்களில் மழை நீர் தேங்கி, மக்கள் அவதிக்குள்ளாகினர். விழுப்புரம் சென்னை நெடுஞ்சாலையில் அரசு மருத்துவமனை எதிரே, சாலை மூழ்கும் அளவிற்கு குளம் போல் மழை நீர் தேங்கியது. நேருஜி சாலை, திருவி.க., வீதி, நகராட்சி பள்ளி மைதானம், ரயில்வே மைதானம், இந்திரா நகர் ரயில்வே தரைப்பாலம், புதிய பஸ் நிலையம் ஆகிய இடங்களில் மழை நீர் தேங்கி நின்றது. இதையடுத்து, மோட்டார் மூலம் மழை நீரை அகற்றப்பட்டது. இதே போல், மாவட்டம் முழுவதும் பல்வேறு இடங்களில் மழை நீர் சாலையில் தேங்கி யதால், வாகன ஓட்டிகள் அவதிப்பட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை