உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் /  மழைநீர் வடிகால் வாய்க்கால் ஆக்கிரமிப்பு அகற்றம்

 மழைநீர் வடிகால் வாய்க்கால் ஆக்கிரமிப்பு அகற்றம்

விழுப்புரம்: விழுப்புரம் அருகே மழைநீர் வடிகால் வாய்க்கால், இடுகாடு இடம் ஆக்கிரமிப்பு அகற்றும் பணி நடந்தது. விழுப்புரம் அடுத்த வளவனுார் பேரூராட்சியின் மழைநீர் வடிகால் வாய்க்கால், நரையூர் எல்லையில் செல்லும் ஓடையில் முடிகிறது. இந்த வாய்க்கால் மற்றும் அங்குள்ள ஆதிதிராவிடர், பழங்குடி இருளர் மக்களுக்கான இடுகாடு இடத்தை சிலர் ஆக்கிரமிப்பு பயிர் சாகுபடி செய்து வந்தனர். இந்த ஆக்கிரமிப்புகளை அகற்றக்கோரி, கலெக்டரிடம் விவசாய சங்க நிர்வாகிகள் மற்றும் அப்பகுதி மக்கள் மனு கொடுத்தனர். இதையடுத்து, கலெக்டர் உத்தரவின்பேரில், நேற்று காலை வருவாய் துறை அலுவலர்கள், அங்கு அளவீடு செய்தனர். அப்போது, வாய்க்கால் மற்றும் இடுகாடு இடம் 1 ஏக்கர் 42 சென்ட் பரப்பளவில் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டது தெரியவந்தது. இதை தொடர்ந்து, 3 பொக்லைன் இயந்திரங்கள் மூலம் வாய்க்கால், இடுகாடு இடத்திலிருந்த ஆக்கிரமிப்புகள் அகற்றும் பணி நடந்தது . பணியை நேற்றே முடிக்க வலியுறுத்தி, இருளர் சமுதாய மக்கள் 10 பேர் அங் கு திரண்டு அதிகாரிகளிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். வளவனுார் சப் இன்ஸ்பெக்டர் வினோத்ராஜ் தலைமையிலான போலீசார் அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இதையடுத்து, அவர்கள் கலைந்து சென்றனர். இச்சம்பவத்தால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை