உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / ராஜா தேசிங்கு பப்ளிக் பள்ளி சி.பி.எஸ்.இ., தேர்வில் சென்டம்

ராஜா தேசிங்கு பப்ளிக் பள்ளி சி.பி.எஸ்.இ., தேர்வில் சென்டம்

செஞ்சி : செஞ்சி அடுத்த களையூர், நாட்டார்மங்கலம் ராஜா தேசிங்கு பப்ளிக் மேல்நிலைப் பள்ளியில் சி.பி.எஸ்.இ., பொதுத் தேர்வு எழுதிய 10 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்கள் அனைவரும் தேர்ச்சி பெற்று தொடர்ந்து இந்த ஆண்டும் பள்ளிக்கு 100 சதவீதம் தேர்ச்சியை பெற்று தந்துள்ளனர்.பத்தாம் வகுப்பில் மாணவி ருபைதா பர்ஹத் 500க்கு 475, மாணவர் தரணி 471, மாணவர் சையத் ஷகில், மாணவி பிரதீபா 468 மதிப்பெண் பெற்று சிறப்பிடங்களைப் பிடித்தனர்.தமிழில் 5 பேர் 100 மதிப்பெண் பெற்றனர். 21 மாணவர்கள் 400க்கு மேல் மதிப்பெண் பெற்றனர். 10ம் வகுப்பு தேர்வில் இப்பள்ளி மூன்றாவது முறையாக மாவட்ட அளவில் சிறப்பிடம் பிடித்து சாதனை படைத்துள்ளது. பிளஸ் 2வில் மாணவி மதுமிதா 500க்கு 473, மாணவர் அஜய்குமார் 472, மாணவி லாவண்யா 451 மதிப்பெண் பெற்று சிறப்பிடம் பிடித்தனர். 11 மாணவர்கள் 400க்கு மேல் மதிப்பெண் எடுத்துள்ளனர். சிறப்பிடங்களைப் பிடித்த மாணவர்களை பள்ளி சேர்மன் பாபு கவுரவித்தார். மேலும், தமிழ் பாடத்தில் 5 மாணவர்கள் 100 மதிப்பெண் பெற காரணமாக இருந்த தமிழாசிரியர் செந்தில் முருகனுக்கு 43 ஆயிரம் ஊக்கத் தொகையும், சிறந்த தேர்ச்சியை கொடுத்த ஆசிரியர்களுக்கு ஊக்க தொகையும் வழங்கினார்.அறக்கட்டளை செயலாளர் அய்யப்பன், பொருளாளர் அண்ணாமலை, பாலிடெக்னிக் கல்லுாரி முதல்வர் கார்த்திகேயன், பள்ளி முதல்வர் அருள்முருகன் மற்றும் ஆசிரியர்கள், பெற்றோர்கள் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை