உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / ரெப்கோ நுண்கடன் நிறுவன கிளை புதிய வளாகம் திறப்பு

ரெப்கோ நுண்கடன் நிறுவன கிளை புதிய வளாகம் திறப்பு

விழுப்புரம்:விழுப்புரம் கே.கே., ரோட்டில், ரெப்கோ நுண்கடன் நிறுவன கிளையின், புதிய வளாகம் திறப்பு விழா நடந்தது. விழாவிற்கு, நிறுவன மேலாண் இயக்குனர் வெங்கடாச்சலம் தலைமை தாங்கி திறந்து வைத்தார். கோட்ட மேலாளர் அய்யப்பன் வரவேற்றார். இதில், மேலாண் இயக்குனர் வெங்கடாச்சலம் கூறுகையில், 'ரெப்கோ நுண்கடன் நிறுவனத்தின் கிளைகள் நாடு முழுவதும் விரிவாக்கம் செய்யும் நோக்கத்துடன் செயல்பட்டு வருகிறது. இந்நிறுவனம் சிறு தொழில் செய்யும் மகளிர்களுக்கு சுய தொழில் செய்ய கடன் உதவி அளித்து வாழ்வில் முன்னேற்றம் அடைய உதவுகிறது. அந்த வகையில் பயனாளிகளுக்கு 50 லட்சம் ரூபாய் வரை கடன் உதவி வழங்கப்பட்டது,' என்றார். ஏற்பாடுகளை மண்டல மேலாளர் பிரகாஷ் மற்றும் கிளை பணியாளர்கள் செய்திருந்தனர். கிளை மேலாளர் தமிழ்செல்வன் நன்றி கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை