மேலும் செய்திகள்
ராணுவ வீரர்கள் நலச்சங்க புதிய நிர்வாகிகள் தேர்வு
24-Nov-2024
மின் பணியாளர்கள் நலச்சங்க கூட்டம்
21-Nov-2024
திண்டிவனம்: ''தமிழ்நாட்டின் முதல் முதலமைச்சர் ஓ.பி.ஆருக்கு சென்னையில் முழு உருவ வெண்கல சிலை அமைக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்' 'என ரெட்டி நலச் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.விழுப்புரம் மாவட்டம், திண்டிவனத்தில் நேற்று, தமிழ்நாடு ரெட்டி நலச் சங்க மாவட்ட நிர்வாகிகள் செயற்குழு மற்றும் பொதுக்குழு ஆலோசனைக் கூட்டம் நடந்தது.கூட்டத்திற்கு, காஞ்சிபுரம் மாவட்ட தலைவர் விவேகானந்தன் தலைமை தாங்கினார். சங்க நிர்வாகிகள் கோகுல்தாஸ், பாலகுரு, ரவிச்சந்திரன், பெத்த ராஜ், ராமசாமி, சுரேஷ், வழக்கறிஞர்கள் ரமணன், ஜெயபிரகாஷ் முன்னிலை வகித்தனர்.கூட்டத்தில், தமிழ்நாடு ரெட்டி நலச் சங்க தலைவராக உட்லண்ட்ஸ் ரவி, செயலாளராக ராஜா பூர்ணசந்திரன், பொருளாளராக அருண்குமார், கவுரவ தலைவராக ராமச்சந்திரன் ஆகியோர் ஒரு மனதாக தேர்ந்தெடுக்கப்பட்டனர்.தொடர்ந்து, தமிழ்நாட்டின் முதல் முதலமைச்சர் ஓ.பி.ஆருக்கு சென்னையில் முழு உருவ வெண்கல சிலை அமைக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். சட்டசபையில் ரெட்டி சமூகத்திற்கு கூடுதல் பிரதிநிதித்துவம் கொடுக்க வேண்டும் என்பது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
24-Nov-2024
21-Nov-2024