வெள்ளத்தில் இறந்தவர்கள் குடும்பத்திற்கு நிவாரண உதவி
விக்கிரவாண்டி : விக்கிரவாண்டி அருகே வெள்ளத்தால் இறந்தவர்களின் குடும்பத்திற்கு எம்.பி., நிவாரண உதவி வழங்கினார்.விக்கிரவாண்டி அடுத்த வி.சாத்தனுாரில் பெஞ்சல் புயல், மழையில் தனலட்சுமி, 68; தனபாக்கியம், 60; முனியம்மாள், 70; ஆகியோர் இறந்தனர். இறந்தவர்கள் குடும்பத்திற்கு நேற்று வி.சி., கட்சி சார்பில் விழுப்புரம் எம்.பி., ரவிக்குமார், தலா 25 ஆயிரம் ரூபாய் நிவாரண உதவி வழங்கினார்.மாவட்ட செயலாளர் திலீபன், ஒன்றிய செயலாளர் வெற்றி வேந்தன், ஜெயச்சந்திரன், கிட்டு, சங்கர், மாநில துணைச் செயலாளர் திருவேந்தன், ஒன்றிய கவுன்சிலர் ஏகாம்பரம், ஊராட்சி தலைவர் தமிழரசன், அரசு ஊழியர் சங்க மாவட்ட அமைப்பாளர் நமச்சிவாயம், கிளைச் செயலாளர் ராமு, மோகன், ஞானவேல் உட்பட பலர் உடனிருந்தனர்.