உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / தீவிபத்தில் பாதிக்கப்பட்ட  குடும்பத்திற்கு நிவாரண உதவி

தீவிபத்தில் பாதிக்கப்பட்ட  குடும்பத்திற்கு நிவாரண உதவி

விக்கிரவாண்டி: விக்கிரவாண்டி அருகே தீ விபத்தில் பாதிக்கப்பட்ட 2 குடும்பத்திற்கு அரசு நிவாரண உதவி வழங்கப்பட்டது.விக்கிரவாண்டி தாலுகா அத்தியூர் திருக்கையில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு, இந்திரா என்பவரது குடிசை வீடு மின் கசிவால் எரிந்து சாம்பலானது. அதே போல் ஒரத்துார் நத்தமேடு பகுதியில் கவிதா என்பவரது குடிசை வீடு சிலிண்டர் வெடித்ததால் எரிந்து சேதமானது. தீ விபத்து ஏற்பட்ட இரு இடங்களுக்கு நேரில் சென்ற அன்னியூர் சிவா எம்.எல்.ஏ., பார்வையிட்டு பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு ஆறுதல் கூறி அரசு நிவாரண நிதியாக தலா ரூபாய் 5 ஆயிரம் மற்றும் மளிகை பொருட்களை வழங்கினார்.நிகழ்ச்சியில் விக்கிரவாண்டி தாசில்தார் செல்வமூர்த்தி, ஒன்றிய சேர்மன் சங்கீத அரசி ரவிதுரை, வருவாய் ஆய்வாளர் தமிழரசன், காணை ஒன்றிய செயலாளர்கள் கல்பட்டு ராஜா, முருகன், மாவட்ட கவுன்சிலர் மீனா வெங்கடேசன், மாவட்ட பிரதிநிதி வெங்கடேசன், ஊராட்சி தலைவர் பாண்டியன், ஒரத்துார் கிளை செயலாளர் சுதாகர், வி.சி.க., ஒன்றிய செயலாளர் ஜெயச்சந்திரன், மா.கம்யூ., ஒன்றிய குழு கலியமூர்த்தி உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி