கண்டாச்சிபுரத்தில் நிவாரணம் வழங்கல்
கண்டாச்சிபுரம் : கண்டாச்சிபுரத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பொதுமக்களுக்கு தமிழக அரசின் நிவாரணப் பொருட்கள் மற்றும் பணம் வழங்கப்பட்டது.கண்டாச்சிபுரம் இந்திரா நகர் மற்றும் மடவிளாகம் பகுதியில் புயல் மற்றும் கனமாழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு, அரசின் ரூ.2 ஆயிரம் மற்றும் நிவாரண உதவிகளை அமைச்சர் பொன்முடி வழங்கினார்.இதில் சேர்மேன் ஜெயச்சந்திரன், மாவட்ட கவுன்சிலர் ரவிச்சந்திரன், நிர்வாகிகள் ரவிக்குமார், ஜீவானந்தம், ஏழுமலை, இளஞ்செழியன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.