சாலையில் தேங்கிய மழைநீர் அகற்றம்
வானுார்: கோட்டக்குப்பத்தில் சாலையில் தேங்கிய மழைநீரை எம்.எல்.ஏ., உத்தரவின் பேரில் அகற்றினர்.கோட்டகுப்பம் இ.சி.ஆர்., சாலையில், சின்னமுதலியார் சாவடி சந்திப்பில் தொடர் மழையால், நெடுஞ்சாலையில் மழைநீர் தேங்கி நின்று, போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. தகவலறிந்த வானுார் எம்.எல்.ஏ., சக்கரபாணி, நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகளை வரவழைத்து, மழைநீர் தேங்காமல் இருக்க ஜெ.சி.பி., மூலம் சீர்செய்ய நடவடிக்கை எடுத்தார். நெடுஞ்சாலைத்துறை பொறியாளர் கிருஷ்ணன், சாலை ஆய்வாளர் ராஜராம் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.