உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / தேனீ கூடு அகற்ற கோரிக்கை

தேனீ கூடு அகற்ற கோரிக்கை

விழுப்புரம் : விழுப்புரம் அருகே நெடுஞ்சாலையில் பொதுமக்கள், வாகன ஓட்டிகளை அச்சுறுத்தி வரும் மலை தேனீக்கள் கூட்டை அகற்ற அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.விழுப்புரம் - திருக்கோவிலுார் நெடுஞ்சாலை, காணை தனியார் ஐ.டி.ஐ., அருகில் உள்ள வேப்பம் மரத்தில் மலை தேனீக்கள் கூடு கட்டியுள்ளது. இந்த தேனீக்கள் அவ்வழியாக செல்லும் இருசக்கர வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்களை அடிக்கடி கொட்டி வருகிறது.இதனால் பொதுமக்கள், வாகன ஓட்டிகள் அப்பகுதியை கடந்து செல்ல அச்சமடைகின்றனர். பொதுமக்களை அச்சுருத்தி வரும் தேனீக்கள் கூட்டை அகற்ற நெடுஞ்சாலை துறை மற்றும் தீயணைப்பு துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை