ஓய்வு பெற்ற அலுவலர்கள் சங்க கூட்டம்
திருவெண்ணெய்நல்லுார் : திருவெண்ணெய்நல்லுாரில் ஓய்வு பெற்ற அலுவலர்கள் சங்க கூட்டம் நடந்தது.கூட்டத்திற்கு, தலைவர் கண்ணன் தலைமை தாங்கினார். சங்க நிர்வாகி கலாவதி வரவேற்றார். செயலாளர் ஜெகன்நாதன் ஆண்டறிக்கை வாசித்தார். பொறுப்பாளர் செல்வராஜ் வரவு செலவு அறிக்கை வாசித்தார்.கூட்டத்தில் திருவெண்ணெய்நல்லுாரில் சார்நிலைக் கருவூலம் அமைக்க வேண்டும். ஆண்கள் மூத்த குடிமக்களுக்கு பஸ்சில் கட்டணமில்லா பயணச்சலுகை வழங்க வேண்டும் என்பது உட்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. ஜெயபாலன் நன்றி கூறினார்.