உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / ஓய்வு பெற்ற அலுவலர் சங்க கூட்டம்

ஓய்வு பெற்ற அலுவலர் சங்க கூட்டம்

திருவெண்ணெய்நல்லுார்; திருவெண்ணெய்நல்லுாரில் தமிழ்நாடு ஓய்வு பெற்ற அலுவலர்கள் சங்க மாதாந்திர கூட்டம் நடந்தது. கூட்டத்திற்கு, சங்க தலைவர் கண்ணன் தலைமை தாங்கினார். கிருஷ்ணமூர்த்தி வரவேற்றார். செயலாளர் மண்ணாங்கட்டி கடந்த மாத கூட்ட அறிக்கையை வாசித்தார். பொருளாளர் செல்வராஜ் கடந்த மாத வரவு செலவு அறிக்கை வாசித்தார். கூட்டத்தில், கிராம நிர்வாக அலுவலக உதவியாளர்கள் மற்றும் குடும்ப ஓய்வூதியர்களுக்கு குடும்ப பாதுகாப்பு நிதி திட்டத்தை அமல்படுத்துவதோடு நிதியை 50 ஆயிரத்திலிருந்து 2 லட்சத்து 50 ஆயிரம் ரூபாயாக உயர்த்தி வழங்க வேண்டும். சார்நிலை கருவூலம் மற்றும் ஏ.டி.எம்., உடன் தேசிய மயமாக்கப்பட்ட வங்கியினை தொடங்க வேண்டும் என்பது உட்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. முகமது ஷெரீப் நன்றி கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !