மேலும் செய்திகள்
பென்ஷனர்கள் கூட்டமைப்பு ஆலோசனை கூட்டம்
03-Nov-2025
திருவெண்ணெய்நல்லுார்: திருவெண்ணெய்நல்லுார் தனியார் திருமண மண்டபத்தில் தமிழ்நாடு ஓய்வு பெற்ற அலுவலர்கள் சங்க மாதாந்திர கூட்டம் நடந்தது. சங்கத் தலைவர் கண்ணன் தலைமை தாங்கினார் பழனிவேல் வரவேற்றார். செயலாளர் மண்ணாங்கட்டி கடந்த மாத கூட்டறிக்கை வாசித்தார் பொருளாளர் செல்வராஜ் கடந்த மாத வரவு செலவு அறிக்கை வாசித்தார். கூட்டத்தில் மூத்த குடிமக்களுக்கான ரயில்வே பயண கட்டண சலுகையை மீண்டும் அமல்படுத்த வேண்டும். பஸ் பயண கட்டண சலுகை சென்னையைப் போல மற்ற மாவட்டங்களுக்கும் விரிவுபடுத்த வேண்டும் என்பது உட்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. சங்க நிர்வாகி ஜெயபால் நன்றி கூறினார்.
03-Nov-2025