மேலும் செய்திகள்
பஸ் ஊழியர் கோரிக்கைகள் பி.எம்.எஸ்., ஆர்ப்பாட்டம்
13-Jun-2025
விழுப்புரம் : விழுப்புரத்தில் போக்குவரத்து கழக ஓய்வு பெற்றவர்கள் நலச்சங்கம் சார்பில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் ஏராளமானோர் கலந்து கொண்டனர். அரசு போக்குவரத்து கழக தலைமை அலுவலகம் முன்பு நடந்த ஆர்பாட்டத்திற்கு மண்டல தலைவர் பாலகிருஷ்ணன் தலைமை தாங்கினார். பொதுச்செயலாளர் ராமமூர்த்தி பேசினார். நிர்வாகிகள் துளசிங்கம், பொருளாளர் ராமலிங்கம் முன்னிலை வகித்தனர். இதில், தமிழக போக்குவரத்து கழகத்தில் பணியாற்றி, கடந்த 2023ம் ஆண்டு ஜூலை முதல் ஓய்வு பெற்ற ஊழியர்களுக்கு, பணப்பலன் வழங்காமல் அனுப்பி வைக்கப்பட்டதற்கு கண்டனம் தெரிவிக்கப்பட்டது.ஓய்வு பெற்றவர்களுக்கு விரைந்து பண பலன்களை வழங்கவும், தி.மு.க., தேர்தல் அறிக்கையில் குறிப்பிட்டபடி, அரசு நிதி ஒதுக்கவும், வலியுறுத்தப்பட்டது. வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை ஆர்ப்பாட்டத்தில் வலியுறுத்தினர்.
13-Jun-2025