தனி நபர் ஆக்கிரமித்த இடம் வருவாய்த்துறையினர் மீட்பு
கோட்டக்குப்பம் : பொம்மையார்பாளையத்தில் தனி நபர் ஆக்கிர மித்து வைத்திருந்த அரசுக்கு சொந்தமான இடத்தை வருவாய் துறை அதிகாகரிகள் மீட்டனர்.கோட்டக்குப்பம் அடுத்த பொம்மையார்பாளையம் இ.சி.ஆர்., சாலையில், அரசுக்கு சொந்தமான அரை ஏக்கர் நிலத்தில், 17 சென்ட் இடத்தை பொம்மையார் பாளையத்தை சேர்ந்த தனிநபர் ஒருவர் கம்பி வேலி அமைத்து ஆக்கிரமிப்பு செய்திருந்தார். இது குறித்து மாவட்ட கலெக்டர் ேஷக் அப்துல் ரஹ்மானுக்கு புகார் சென்றது.அந்த இடத்தை உடன டியாக மீட்கும் படி, கலெக் டர் உத்தரவு பிறப்பித்தார்.அதன் படி, வானூர் தாசில்தார் வித்யாதரன், பொம்மையார்பாளையம் வி.ஏ.ஓ., சஷ்டி குமரன் மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகள், நேற்று அப்பகுதியை ஆய்வு செய்தனர்.ஆக்கிரமிப்பு செய்த இடத்தில் அமைக்கப்பட்டிருந்த கம்பி வேலியை, ஜே.சி.பி., இயந்திரம் மூலம் அகற்றினர். கோட்டக்குப்பம் இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) முத்துலட்சுமி தலைமையில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.