உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / விவசாய நிலப் பகுதியில் தாழ்வான மின் கம்பியால் விபத்து அபாயம்

விவசாய நிலப் பகுதியில் தாழ்வான மின் கம்பியால் விபத்து அபாயம்

திருவெண்ணெய்நல்லுார்: விவசாய நிலப் பகுதியில் மின்கம்பிகள் தாழ்வாக செல்வதால் விபத்து அபாயம் உள்ளது. திருவெண்ணெய்நல்லுார் பேரூராட்சி தெற்கு பகுதியில் 200க்கும் மேற்பட்ட ஏக்கர் பரப்பளவில் விவசாயிகள் நெற்பயிர்களை பயிரிட்டு தற்போது அறுவடை செய்து வருகின்றனர். அப்பகுதியில் விவசாய மின் இணைப்புக்காக மின்கம்பங்கள் அமைக்கப்பட்டு, விவசாயிகளுக்கு மின்சாரம் வினியோகிக்கப்பட்டு வருகிறது. அங்கு அமைக்கப்பட்ட மின்கம்பங்கள் சாய்ந்து அதிலிருந்து செல்லும் மின்கம்பிகள் மிகவும் தாழ்வாக செல்வதால் விவசாயிகள் நிலத்திற்கு செல்லும்போது அச்சத்துடனே செல்லும் நிலை உள்ளது. மேலும், விவசாய பயன்பாட்டுக்காக இயந்திரங்களை எடுத்து செல்லும்போது, அவ்வழியாக எடுத்துச் செல்ல முடியாமலும் அப்படியே மாற்று வழியில் எடுத்துச் சென்றால் நெல்களை இயந்திரங்களை கொண்டு அறுவடை செய்ய முடியாத சூழல் உள்ளது. இது குறித்து இப்பகுதி விவசாயிகள் கூறியதாவது: இங்கு சில நேரங்களில் தாழ்வாக செல்லும் மின்கம்பிகள் காற்றின் வேகத்தின் காரணமாக அறுந்து கீழே விழுந்து விடுகின்றன. இத்தகைய சூழல் காரணமாக கடந்த இரு ஆண்டுகளில் இப்பகுதியில் மட்டும் இரு விவசாயிகள் அறுந்து கிடந்த மின்கம்பில் இருந்து மின்சாரம் தாக்கி உடல் கருகி உயிரிழந்துள்ளனர். இதுகுறித்து மின்வாரியத்தினர் நடவடிக்கை எடுக்க வேண்டும். அதிகாரிகள் நடவடிக்கை எடுக்காவிட்டால் மின்வாரிய அலுவலகத்தை முற்றுகையிடுவோம். இவ்வாறு அவர்கள் தெரிவித்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 1 )

நிக்கோல்தாம்சன்
ஜூலை 24, 2025 05:56

இது போன்று இடங்களில் இன்னமும் நடவடிக்கை எடுக்காமல் இருக்கும் மின்துறை ஊழியர்களை சஸ்பெண்ட் செய்திருக்க வேண்டும்


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை