உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / சாலை பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சி

சாலை பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சி

விழுப்புரம்; விழுப்புரம் பெருந்திட்ட வளாகம் முன் சாலை பாதுகாப்பை யொட்டி, போக்குவரத்து போலீசார் சார்பில் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது.விழுப்புரம் மாவட்ட காவல் துறை மற்றும் போக்குவரத்து போலீசார் சார்பில், சாலை பாதுகாப்பு மாதத்தை யொட்டி விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடைபெறுகிறது. கடந்த 1ம் தேதி முதல் வரும் 31ம் தேதி வரை பல்வேறு சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகிறது. இதையொட்டி, விழுப்புரம் பெருந்திட்ட வளாகம் முன், போக்குவரத்து பிரிவு இன்ஸ்பெக்டர் வசந்த் தலைமையில் மைம் தியேட்டர் கலைக்குழுவினர் போக்குவரத்து விதிகளை மீறினால் நடக்கும் விபத்துகளை கலை நிகழ்ச்சி மூலம் செய்து காட்டினர். திருச்சி நெடுஞ்சாலையில் நடந்த நிகழ்ச்சியை கண்ட வாகன ஓட்டிகளுக்கு, போலீசார் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு பிரசுரங்களை வழங்கினர். இதில், சப்-இன்ஸ்பெக்டர்கள் குமாரராஜா, விஜயரங்கன், தலைமை காவலர் வினோத், லட்சுமிநாராயணன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி