குண்டும், குழியுமான சாலை: வாகன ஓட்டிகள் அவதி
திண்டிவனம்: திண்டிவனம், கிடங்கல் 1 வழியாக பூதேரிக்கு, சாலை செல்கிறது. இந்த சாலை வழியாக தினந்தோறும் நுாற்றுக்கணக்கான வாகனங்கள் செ ன்று வருகின்றன. இந்த சாலை தற்போது சேதமடைந்து குண்டும், குழியுமாக போக்குவரத்திற்கு லாயக்கற்ற நிலையில் உள்ளது. இதனால், அங்கு அடிக்கடி சிறு சிறு விபத்துகள் ஏற்பட்டு வருகின்றன. வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் பாதிப்பிற்குள்ளாகி வருகின்றனர். சேதமடைந்த இச்சாலையை சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.