உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / வீடு புகுந்து நகை, பணம் திருட்டு கிளியனுார் அருகே துணிகரம்

வீடு புகுந்து நகை, பணம் திருட்டு கிளியனுார் அருகே துணிகரம்

வானுார்: கிளியனுார் அருகே வீட்டின் பீரோவில் இருந்த 10 சவரன் நகை, 30 ஆயிரம் ரூபாயை திருடிய நபரை போலீசார் தேடி வருகின்றனர். கிளியனுார் அடுத்த கோவடி பெரியதோப்பு தெருவைச் சேர்ந்தவர் முனுசாமி மனைவி புவனேஸ்வரி, 47; கூலித் தொழிலாளி. இவர் கடந்த 5ம் தேதி காலை 7;00 மணிக்கு தனது வீட்டை பூட்டிக்கொண்டு, சாவியை வீட்டின் வாசலில் வைத்து விட்டு முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு சென்றார். தொடர்ந்து 6ம் தேதி மாலை 4:00 மணிக்கு வீட்டிற்கு வந்து பார்த்த போது, வீட்டின் பீரோவில் வைத்திருந்த 10 சவரன் நகை, 30 ஆயிரம் ரூபாய் திருடு போயிருப்பது தெரியவந்தது. வீட்டிற்கு வெளியே வைத்திருந்த சாவியை மர்ம நபர் திறந்து, பீரோவில் இருந்து நகை மற்றும் பணத்தை திருடிச் சென்றிருப்பது தெரிய வந்தது. தகவலறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற விழுப்புரம் கைரேகை பிரிவு ஏ.டி.எஸ்.பி., சோமசுந்தரம், இன்ஸ்பெக்டர் பவித்ரா மற்றும் போலீசார் தடயங்களை சேகரித்தனர். இதுகுறித்து புவனேஸ்வரி கொடுத்த புகாரின் பேரில், கிளியனுார் போலீசார் வழக்கு பதிந்து மர்ம நபரை தேடி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை