உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / கூரை வீடு தீப்பிடித்து பொருட்கள் சேதம்

கூரை வீடு தீப்பிடித்து பொருட்கள் சேதம்

மரக்காணம் : மரக்காணம் அருகே கூரை வீடு தீப்பற்றி எரிந்து சாம்பலானது.மரக்காணம் அருகே உள்ள கே.என்.பாளையத்தை சேர்ந்த ராமன் மனைவி ராணி,55; நேற்று காலை இவருக்கு சொந்தமான கூரை வீட்டை பூட்டி விட்டு கூலி வேலைக்கு சென்றார். மதியம் 2:00 மணிக்கு திடீரென வீடு தீப்பற்றி எரிந்தது. தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து தீயை அணைத்தனர். ஆனால் வீடு முற்றிலும் எரிந்து சாம்பலானது.மேலும் வீட்டில் இருந்த பீரோ, கட்டில், டி.வி., உள்ளிட்ட பொருட்கள் சேதமானது. இது குறித்து மரக்காணம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ