உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / கூரை வீடு எரிந்து சேதம்

கூரை வீடு எரிந்து சேதம்

திருவெண்ணெய்நல்லுார்; திருவெண்ணெய்நல்லுார் அருகே, மின்கசிவு காரணமாக கூரை வீடு எரிந்து சேதமானது. திருவெண்ணெய்நல்லுார் அடுத்த அமாவாசைபாளையம் கிராமத்தைச் சேர்ந்தவர் குமார், 58; விவசாயி. இவரது கூரை வீடு நேற்று முன்தினம் மாலை மின் கசிவு காரணமாக திடீரென, தீப்பற்றி எரிய தொடங்கியது. காற்றின் வேகம் காரணமாக தீ அதிக அளவில் பரவியதால், வீட்டில் வைத்திருந்த அத்தியாவசிய பொருட்கள் எரிந்து சாம்பலானது. இந்த தீ விபத்து குறித்து திருவெண்ணெய்நல்லுார் போலீசார் விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !