ரோஸ்மலர் டெவலப்மெண்ட் சொசைட்டி கூட்டம்
விழுப்புரம் : விழுப்புரத்தில் ரோஸ்மலர் டெவலப்மெண்ட் கோ - ஆப்ரெட்டிவ் சொசைட்டியின் 17 வது ஆண்டு பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது. இதில், தலைவர் பிரபலாராஸ் தலைமை தாங்கினார். பொது மேலாளர் மனோகரன் வரவேற்றார். இதில் கடந்த, 2024-25ம் ஆண்டிற்கான வரவு செலவு கணக்கு சமர்பிக்கப்பட்டு ஏற்கப்பட்டது. தொடர்ந்து ஆண்டறிக்கை வாசிக்கப்பட்டது. இதையடுத்து, பவ்டா குழுமம் மேலாண்மை இயக்குனர் ஜாஸ்லின் தம்பி பேசினார். இந்த கூட்டத்தில், இயக்குனர்கள் சிதம்பரதானு பிள்ளை, சிவராஜ், வி த்யாதரன், ஆடிட்டர் இமானுவேல், செயலா ளர் சரத், முதன்மை நிதி ஆலோசகர் பாலாஜி ரங்கராஜன், முதன்மை பொது மேலாளர்கள் ரங்கராஜன், செல்வம், சாந்தாராம், சமரேந்திர தாஸ், தேவசேனாதிபதி, புகழேந்தி, பன்னீர்செல்வம், முதன்மை கண்காணிப்பு அலுவலர் மாடசாமி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். நிறைவாக, ரோஸ்மலர் நிறுவன இயக்குனர் சிவராஜ் நன்றி கூறினார்.