ரூ.10 லட்சம் மோசடி எஸ்.பி., அலுவலகத்தில் மனு
விழுப்புரம்: சூப்பர் மார்க்கெட்டில் பங்கு தருவதாக கூறி பணத்தை மோசடி செய்தவர்கள் மீது நடவடிக்கை மேற்கொள்ள எஸ்.பி., அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. மேல்மலையனுார் அருகே சாத்தம்பாடி கிராமத்தை சேர்ந்தவர் சிவக்குமார்,60; இவர் மற்றும் கிராம மக்கள் சிலர், நேற்று எஸ்.பி., அலுவலகத்தில் புகார் அளித்தனர். அதில் கூறியிருப்பதாவது: கடந்த, 2022ம் ஆண்டு ஜூன் மாதம் இரண்டு பேர் வந்து, அவலுார்பேட்டையில் சூப்பர் மார்க்கெட் துவங்க முதலீடு பங்கு தொகை தந்தால், லாபத்தை ஆண்டிற்கு ஒருமுறை பிரித்து தருவதாக கூறினர். தொடர்ந்து இருவரும், 18 பேரிடம் மொத்தம் ரூ.10 லட்சம் வரை வாங்கி ஏமாற்றி மோசடி செய்தனர். இது குறித்து உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். இவ்வாறு அதில், தெரிவிக்கப்பட்டுள்ளது.