ரூ.5.5 கோடி மோசடி: கலெக்டரிடம் புகார்
விழுப்புரம் : வானுாரில் ஏலச்சீட்டு நடத்தி ரூ.5.50 கோடி மோசடி செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி, பாதித்த நபர்கள் கலெக்டர் அலுவலகத்தில் மனு அளித்தனர்.மனு விபரம்:வானுார், திருச்சிற்றம்பலம், பாப்பாஞ்சாவடி, தவளக்குப்பம், அய்யங்குட்டிப்பாளையத்தை சேர்ந்த 250க்கும் மேற்பட்டோர், திருச்சிற்றம்பலம் கூட்ரோட்டை சேர்ந்த பெண் ஒருவரிடம் கடந்த 2021ம் ஆண்டு அக்., முதல் ஏலச்சீட்டு கட்டி வந்தனர். இவர்கள், ஏலம் எடுக்காத நிலையில், அந்த பெண் ஏலச் சீட்டை திடீரென நிறுத்தினார். அவரிடம் நாங்கள் கட்டிய பணத்தை கேட்டதற்கு தர மறுத்தவிட்டார். அந்த பெண் மற்றும் அவரது குடும்பத்தினர் 5 பேர் சேர்ந்து, எங்கள் 250 பேரிடம் ரூ.5.5 கோடி பணத்தை வசூலித்து திரும்ப தராமல் மோசடி செய்துள்ளனர். இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.