உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / ஊரக வளர்ச்சி அலுவலர்கள் ஆர்ப்பாட்டம்

ஊரக வளர்ச்சி அலுவலர்கள் ஆர்ப்பாட்டம்

விழுப்புரம் : தமிழ்நாடு ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் சங்கம் சார்பில் 25 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடந்தது. விழுப்புரத்தில் நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு, மாவட்ட தலைவர் ஜெயசங்கர் தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர ரமேஷ் முன்னிலை வகித்தார். ரத்தினம், முருகேசன், சரவணன் வாழ்த்தி பேசினார். ஊரக வளர்ச்சித்துறையில் காலியாக உள்ள ஊராட்சி செயலாளர் பணியிடங்கள், ஈப்பு டிரைவர், பதிவறை எழுத்தர், அலுவலக உதவியாளர், இரவு காவலர் உள்ளிட்ட அனைத்து பணியிடங்ளையும் நிரப்ப வேண்டும் என்பது உள்ளிட்ட 25 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தப்பட்டது. அரசு ஊழியர் சங்க மாவட்ட செயலாளர் சிவக்குமார் உட்பட பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை