உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / பூமாரி அம்மனுக்கு சாகை வார்த்தல் விழா

பூமாரி அம்மனுக்கு சாகை வார்த்தல் விழா

விழுப்புரம் : விழுப்புரம் கீழ்மேல் அண்ணா தெருவில் பூமாரியம்மன் கோவிலில் சாகை வார்த்தல் விழா நடந்தது.அதனையொட்டி, நேற்று முன்தினம் அதிகாலை 4:00 மணிக்கு கணபதி ஹோமம், 6:00 மணிக்கு பம்பையில் இருந்து கரகம் ஜோடித்து கொண்டு வந்து, 7:30 மணிக்கு சுவாமிக்கு அபிஷேக, ஆராதனை நடந்தது.தொடர்ந்து மதியம் 1:00 மணிக்கு சாகை வார்த்தலும், மாலை 6:00 மணிக்கு கும்ப படையலும், இரவு 9:00 மணிக்கு அம்மன் சிறப்பு அலங்காரத்தில் சுவாமி வீதியுலாவும் நடந்தது. ஏற்பாடுகளை கோவில் நிர்வாகிகள் மற்றும் அப்பகுதி மக்கள் செய்திருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி