உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / சன்மார்க்க சங்க முப்பெரும் விழா

சன்மார்க்க சங்க முப்பெரும் விழா

செஞ்சி: செஞ்சி, மேல்மலையனுார் வட்ட சன்மார்க்க சங்க முப்பெரும் விழா செஞ்சியில் நடந்தது.சங்கத் தலைவர் கோவிந்தசாமி தலைமை தாங்கினார். செயலாளர் வெங்கடேசன் வரவேற்றார். புருஷோத்தமன் துவக்க உரையாற்றினார்.மதுரை வள்ளலார் கல்வி பயிற்சி ஆராய்ச்சி நிறுவனம், புலவர் பாண்டுரங்கன், புலிகரம்பலுார் வள்ளலார் கல்வி பயிற்சி ஆராய்ச்சி நிறுவனம், பொன்னையன், வடலுார் திருஅருட்பா இசைச் சங்க செயலாளர் ஜோதி முன்னிலை வகித்தனர்.வடலுார் வள்ளலார் தெய்வ நிலையம் அறங்காவலர் குழு உறுப்பினர் கனகசபை, விழுப்புரம் அகிம்சை பிரசார சங்கம் கிஷன்சந்த், ஆலம்பூண்டி வள்ளலார் கொள்கை நெறிபரப்பு இயக்க செயலாளர் ரவிச்சந்திரன் மற்றும் அண்ணாமலை, பழனிவேலு, ராமகிருஷ்ண வியாஸ், ஜானகிராமன், சர்தார்சிங் ஆகியோர் வாழ்த்திப் பேசினர்.நிகழ்ச்சியில், அகிம்சை பிரசார குழுவினரை பாராட்டி விருது வழங்கி கவுரவிக்கப்பட்டனர்.சங்க பொருளாளர் அண்ணாமலை நன்றி கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி