பள்ளி தலைமை ஆசிரியர்கள் ஆர்ப்பாட்டம்
விழுப்புரம் : விழுப்புரத்தில் தமிழ்நாடு மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் கழகம் சார்பில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடந்தது. நகராட்சி திடலில் நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட தலைவர் செந்தில்குமார் தலைமை வகித்தார். விழுப்புரம் கல்வி மாவட்ட தலைவர் வெங்கடேச குமார் வரவேற்றார். தலைமையிட செயலாளர் ஸ்டாலின், தனியார் பள்ளிகள் செயலாளர் பாலமுரளி, சட்ட செயலர் சந்திரசேகர், பிரசார செயலர் முருகன், துணை தலைவர்கள் சுமதி, பச்சைகண்ணு, சுந்தரவடிவேல், பழனிவேல், பொன்முடி ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட செயலர் அண்ணாமலை, முன்னாள் தலைவர்கள் சேவியர் சந்திரகுமார், பழனி, பொருளாளர் ஜோசப் எட்வின், அமைப்பு செயலர்கள் ரகு, சுசீலா ஆகியோர் பேசினர். கல்வி மாவட்ட தலைவர் மணிவண்ணன் நன்றி கூறினார். இதில், அனைத்து அரசு பள்ளிகளிலும் அடிப்படை பணியாளர்களை நியமிக்க வேண்டும்; பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும்; என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.