உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / பள்ளி விளையாட்டு விழா

பள்ளி விளையாட்டு விழா

விழுப்புரம் : ஜெ யேந்திரர் பள்ளிக்கு,' ஸ்போர்ட்ஸ் ஸ்கூல்' விருது வழங்கப்பட்டது. விழுப்புரம் ஜெயேந்திர சரஸ்வதி மேல்நிலைப் பள்ளியில், 31ம் ஆண்டு விளையாட்டு தின விழா நடைபெற்றது. எஸ்.பி.சரவணன் கலந்து கொண்டு, ஒலிம்பிக் சுடரை ஏற்றி, நிகழ்ச்சியை துவக்கி வைத்தார். தடகளப் போட்டிகளை, இந்திய கிரிக்கெட் வீரர் நடராஜன் துவக்கி வைத்தார். தொடர்ந்து போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு, எஸ்.பி., சரவணன், கிரிக்கெட் வீரர் நடராஜன் ஆகியோர் வெற்றி கோப்பைகளை வழங்கி பாராட்டினர். மேலும், பள்ளிக்கு விழுப்புரத்தின் 'நம்பர் ஒன் ஸ்போர்ட்ஸ் ஸ்கூல்' என்கிற விருதை வழங்கி கவுரவித்தனர். நிகழ்ச்சியில் பள்ளியின் தாளாளர் பிரகாஷ், செயலாளர் ஜனார்த்தனன் மற்றும் நிர்வாக இயக்குனர்கள், பள்ளி முதல்வர்கள், ஆசிரியர்கள், பெற்றோர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ