| ADDED : நவ 20, 2024 05:43 AM
விக்கிரவாண்டி : விக்கிரவாண்டி அருகே பைக் மீது லாரி மோதிய விபத்தில் பள்ளி மாணவர் இறந்தார். மேலும் 2 மாணவர்கள் படுகாயமடைந்தனர்.விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி அடுத்த பாப்பனப்பட்டை சேர்ந்தவர் நாகப்பன் மகன் மணிகண்டன், 17; பிளஸ் 2 மாணவர். அதே பகுதி ராமு மகன் ராகுல், 17; சாம்பல வர்ணன் மகன் விஸ்வா, 17. மூவரும் பனையபுரம் அரசு மேல்நிலைப் பள்ளி மாணவர்கள். இவர்கள், நேற்று மாலை அப்பாச்சி பைக்கில் விக்கிரவாண்டி நோக்கிச் சென்றனர். பைக்கை மணிகண்டன் ஓட்டினார்.6:30 மணியளவில் பாப்பனப்பட்டு அழுக்கு பாலம் பகுதியிலிருந்து திருச்சி - சென்னை சாலையை கடக்க முயன்றனர். அப்போது கடலுாரிலிருந்து சென்னை நோக்கிச் சென்ற கெமிக்கல் லோடு லாரி பைக் மீது மோதியது. இதில், படுகாயமடைந்த 3 பேரையும் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லும் வழியில் ராகுல் இறந்தார். மற்ற இருவரும் சிகிச்சைக்கு சேர்க்கப்பட்டனர்.விபத்து குறித்து விக்கிரவாண்டி போலீசார் வழக்குப் பதிந்து, திருச்சியைச் சேர்ந்த லாரி டிரைவர் ரமேஷ், 26; என்பவரை கைது செய்தனர்.