உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / பள்ளி மாணவி தற்கொலை

பள்ளி மாணவி தற்கொலை

செஞ்சி: வயிற்று வலியால் அவதிப்பட்ட, 10ம் வகுப்பு மாணவி துாக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.அனந்தபுரம் அடுத்த சங்கீதமங்கலம் கிராமத்தை சேர்ந்தவர் வாசுதேவன் மகள் ஸ்ரீமதி, 15; அதே ஊரில் உள்ள,அரசு பள்ளியில், 10ம் வகுப்பு படித்து வந்தார்.வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்த ஸ்ரீமதி நேற்று காலை 7:00 மணிக்கு, விவசாய நிலத்தில் உள்ள அவரது வீட்டில் துாக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.இது குறித்த புகாரின் பேரில், அனந்தபுரம் போலீசார் வழக்கு பதிந்து அவரது உடலை பிரேத பரிசோதனைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவ கல்லுாரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ