மேலும் செய்திகள்
அரசு பள்ளியில் அறிவியல் கண்காட்சி
08-Jan-2025
செஞ்சி, ;ஆலம்பூண்டி ஸ்ரீரங்கபூபதி இன்டர்நேஷனல் பள்ளியில் அறிவியல் கண்காட்சி நடந்தது. செஞ்சி அடுத்த ஆலம்பூண்டி ஸ்ரீரங்க பூபதி இன்டர்நேஷனல் சி.பி.எஸ்.இ., பள்ளியில் அறிவியல் கண்காட்சி நடந்தது. எல்.கே.ஜி., முதல் 9ம் வகுப்புவரை உள்ள மாணவர்கள் ஏராளமான அறிவியல் படைப்புகளை கண்காட்சிக்கு வைத்திருந்தனர். கண்காட்சியை தாளாளர் ரங்கபூபதி தலைமை தாங்கி,துவக்கி வைத்தார். செயலாளர் ஸ்ரீபதி, இயக்குனர் சரண்யா ஸ்ரீபதி முன்னிலை வகித்தனர். பள்ளி முதல்வர் தனலட்சுமி வரவேற்றார். கண்காட்சியில் கலந்து கொண்ட மாணவர்களுக்கு சான்றிதழ் மற்றும் பரிசு வழங்கினர். பெற்றோர், பொதுமக்கள் மற்றும் மாணவர்கள் கண்காட்சியை பார்வையிட்டனர். பி.ஆர்.ஓ., ரத்னாகணபதி நன்றி கூறினார்.
08-Jan-2025