உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / ஸ்கூட்டர் திருடியவர் கைது

ஸ்கூட்டர் திருடியவர் கைது

கண்டாச்சிபுரம்: பாடிப்பள்ளம் கிராமத்தில் விவசாயியின் ஸ்கூட்டரை திருடிய நபரை போலீசார் கைது செய்தனர்.செஞ்சி அடுத்த பாடிப்பள்ளம் கிராமத்தைச் சேர்ந்தவர் ராஜசேகரன், 60; விவசாயி. இவர், கடந்த 12ம் தேதி தனது நிலத்தின் அருகே ஸ்கூட்டரை நிறுத்தியிருந்தார். வயல் வெளியில் வேலைகளை முடித்து விட்டு திரும்பி வந்து பார்த்தபோது ஸ்கூட்டர் திருடு போயிருந்தது.இதுகுறித்து அவர் அளித்த புகாரின் பேரில் கண்டாச்சிபுரம் போலீசார் வழக்குப் பதிந்து, ஸ்கூட்டரைத் திருடிய சென்னை, ஆவடியைச் சேர்ந்த ஏழுமலை, 33; என்பவரை கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



சமீபத்திய செய்தி