உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / கடல் ஆமைகள் பாதுகாப்பு கருத்தரங்கு

கடல் ஆமைகள் பாதுகாப்பு கருத்தரங்கு

மரக்காணம், : மரக்காணம் அருகே உள்ள அகரம் வனத்துறை அலுவலக விளக்க மையத்தில் ஆமைகள் மற்றும் முட்டைகள் பாதுகாப்பு குறித்த கருத்தரங்கு கூட்டம் நடந்தது.மண்டல தலைமை வன பாதுகாவலர் பெரியசாமி தலைமை தாங்கினார். விழுப்புரம் உதவி வனப்பாதுகாவலர் உமாசங்கர் முன்னிலை வகித்தார். திண்டிவனம் வனச்சரக அலுவலர் புவனேஷ் வரவேற்றார்.யுகோ பவுண்டேஷன் நிறுவன தலைவர் பூபேஷ் குப்தா சிறப்புரையாற்றினார். கடல் ஆமைகளின் முக்கியத்துவம் குறித்து காணொளி மூலம் கடல் வாழ் உயிரின ஆராய்ச்சியாளர் கதிரேசன் விளக்கினார்.நிகழ்ச்சியில் மரக்காணம் பி.டி.ஓ., மீனவ கிராம மக்கள், தன்னார்வலர்கள் பங்கேற்றனர்.வனவர் மணிகண்டன் நன்றி கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி