உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் /  வாடகை செலுத்தாத கடைகளுக்கு சீல் பேரூராட்சி செயல் அலுவலர் தகவல்

 வாடகை செலுத்தாத கடைகளுக்கு சீல் பேரூராட்சி செயல் அலுவலர் தகவல்

விழுப்புரம்: வளவனுார் பேரூராட்சியில் வாடகை பாக்கி செலுத்தாத கடைகளுக்கு 'சீல்' வைக்கப்பட்டது. இது குறித்து செயல் அலுவலர் ஜேம்ஸ் டி சாமி கூறியதாவது: வளவனுார் பேரூராட்சி மேற்கு, கிழக்கு பாண்டி ரோட்டில் வணிக வளாக கடைகள் கடந்த 2014-15 மற்றும் 2015-16ம் ஆண்டுகளில் புதிதாக கட்டி பொது ஏலம் விடப்பட்டது. இதில், உயர்ந்த ஏலம் கோரிய நபர்களுக்கு குத்தகை உரிமம் வழங்கப்பட்டு 2 ஆண்டுகள் குத்தகை வசூலிக்கப்பட்டது. இந்நிலையில் அரசாணைப்படி, ஆண்டிற்கு 5 சதவீத குத்தகை உயர்வு செய்ததையும், வாடகையை குறைக்கவும் குத்தகைதாரர்கள் சென்னை ஐகோர்டில் 22 பேர், வழக்கு தொடர்ந்தனர். பேரூராட்சி சார்பில் உரிய ஆவணங்களோடு, எதிர் உறுதி ஆவணம் தாக்கல் செய்யப்பட்டது. இந்நிலையில் வழக்கு விசாரணையின் போது, மனுதாரர்களால் கொரோனா தொற்றால், அரசாணைப்படி, 7 மாத குத்தகை தள்ளுபடி செய்யப்பட்டது. இந்த வழக்கில், இறுதி தீர்ப்பில் மனுதாரர்களான குத்தகைதாரர்கள் வாடகை நிலுவை தொகை முழுவதையும் செலுத்த வேண்டும். உரிய விதிகளை பின்பற்றுமாறு குத்தகைதாரர்களுக்கு அறிவுறுத்தப்பட்டு வழக்கு தள்ளுபடி செய்யபப்ட்டது. அதன்படி, வாடகை நிலுவை தொடர்பாக பல முறை அறிவிப்பு வழங்கியும், ஒவ்வொரு கடையிலும் 1 லட்சம் முதல் 1.60 லட்சம் ரூபாய் வரை நிலுவை பாக்கியாக உள்ளது. பேரூராட்சிக்கு முக்கிய நிதி ஆதாரமே கடைகளின் வாடகையாகும். மேலும், பேரூராட்சிகளின் இயக்குநர், கலெக்டர் மற்றும் உதவி இயக்குனர் ஆகியோர் ஆய்வு கூட்டங்களில் வாடகை நிலுவையின்றி வசூலிக்க வேண்டும் என கண்டிப்போடு தெரிவித்துள்ளனர். இதையடுத்து, தற்போது நிலுவை செலுத்தாத கடைகளுக்கு 'சீல்' வைக்கப்பட்டு வருகிறது. குத்தகைதாரர்கள் விரைந்து வாடகை பாக்கியை தாங்களாகவே முன்வந்து செலுத்த வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ