மேலும் செய்திகள்
மதச்சார்பற்ற கூட்டணி கட்சிகள் ஆலோசனை
09-Nov-2025
விழுப்புரம்: விழுப்புரம் கலைஞர் அறிவாலயத்தில் மதசார் பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் அனைத்து கட்சி நிர்வாகிகள் கூட்டம் நடந்தது. விழுப்புரம் தெற்கு மாவட்ட தி.மு.க., பொறுப்பாளர் கவுதமசிகாமணி தலைமை தாங்கினார். அவைத் தலைவர் ஜெயச்சந் திரன், துணைச் செயலாளர்கள் முருகன், கற்பகம் முன்னிலை வகித்தனர். ரவிக்குமார் எம்.பி., காங்., வடக்கு மாவட்ட தலைவர் ரமேஷ், வி.சி., மாவட்ட செயலாளர் பெரியார், திலீபன், ம.தி.மு.க., பாபு கோவிந்தராஜ், இந்திய கம்யூ., சரவணன், சவுரிராஜன், மா.கம்யூ., செயலாளர் சுப்ரமணியன், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் அமீர் அப்பாஸ். மனிதநேய மக்கள் கட்சி முஸ்தாக்தீன், மக்கள் நீதி மய்யம் பாபு, த.வா.க., மோகன் உள்ளிட் டோர் பங்கேற்றனர். கூட்டத்தில், தமிழக முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பையொட்டி, தமிழகத்தில், எஸ்.ஐ.ஆர்., சீராய்வை தேர்தல் ஆணையம் கைவிட வேண்டும். மத்திய அரசின் கைப்பாவையாக மாறி எதேச்சதிகார போக்கோடு தமிழகத்தில் எஸ்.ஐ.ஆர்.,யை செயல்படுத்துவதை கண்டித்து நாளை 11ம் தேதி நடைபெறவுள்ள கண்டன ஆர்ப்பாட்டத்தில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி கட்சிகளை சேர்ந்த நிர்வாகிகள் திரளாக கலந்து கொள்வது என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
09-Nov-2025