உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / வாலிபால் அணி தேர்வு 19ம் தேதி நடக்கிறது 

வாலிபால் அணி தேர்வு 19ம் தேதி நடக்கிறது 

விழுப்புரம் : விழுப்புரம் மாவட்ட அளவிலான வாலிபால் அணி தேர்வு வரும் 19ம் தேதி நடக்கிறது.விழுப்புரம் மாவட்ட வாலிபால் சங்கத் தலைவர் கவுதம சிகாமணி அறிக்கை:தமிழ்நாடு மாநில அளவில், 23 வயதுக்குட்பட்டோருக்கான, ஆண்கள் மற்றும் பெண்கள் அணி பங்கேற்கும் வாலிபால் போட்டிகள், வரும் நவம்பர் 2ம் தேதி துவங்கி 5ம் தேதி வரை வேலுாரில் நடக்கிறது.இப்போட்டியில் பங்கேற்கும், விழுப்புரம் மாவட்ட அணிக்கான வீரர், வீராங்கனை தேர்வு வரும் 19ம் தேதி காலை 8:00 மணிக்கு, விழுப்புரம் மாவட்ட விளையாட்டு அலுவலக வாலிபால் மைதானத்தில் நடைபெற உள்ளது.இந்த தேர்வில் கலந்துகொள்ளும் வீரர், வீராங்கனைகள், 1.1.2002ம் ஆண்டுக்குள் பிறந்தவராக இருக்க வேண்டும். வீரர்கள் தங்களது ஆதார் அட்டை நகலுடன், அன்றைய தினம் போட்டி தேர்வில் கலந்துகொள்ளலாம்.இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை