உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / தெய்வானை அம்மாள் கல்லுாரியில் கருத்தரங்கம்

தெய்வானை அம்மாள் கல்லுாரியில் கருத்தரங்கம்

விழுப்புரம்; விழுப்புரம் தெய்வானை அம்மாள் மகளிர் கல்லுாரியில், வணிக நிர்வாகத்துறை சார்பில், தகவல் தொடர்பு திறன்கள் குறித்த தலைப்பில் கருத்தரங்கம் நடந்தது.சிறப்பு விருந்தினராக சென்னை அங்கிடைன் நிறுவன சேவை ஒருங்கிணைப்பாளர் திவ்யா கலந்துகொண்டு பேசினார்.கல்லுாரி வணிகத்துறை உதவி பேராசிரியர் சிலம்பரசி வரவேற்றார். முதலாம் ஆண்டு, இரண்டாம் ஆண்டு, மூன்றாம் ஆண்டு வணிகவியல் மாணவிகள் மற்றும் கல்லுாரி முன்னாள் மாணவர்கள் பங்கேற்றனர்.இந்த நிகழ்ச்சியில் பயனுள்ள தகவல் தொடர்பு நிலைகள், விண்ணப்பம் மற்றும் நேர்காணல் தயாரிப்பு, தொழில் வளர்ச்சிக்கான செயல் திட்டத்தை உருவாக்குவதன் முக்கியத்துவம் உள்ளிட்டவைகள் குறித்து பேசினார். மேலும், கார்ப்பரேட் உலகில் பயணிக்கும் பெண்களுக்கு, ஆரோக்கியமான வேலை, வாழ்க்கை சமநிலையை பராமரிப்பதன் முக்கியத்துவத்தையும் அவர் எடுத்துரைத்தார். உதவி பேராசிரியர் தேவி நன்றி கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை