அரசு கல்லுாரியில் கருத்தரங்கம்
விழுப்புரம்: விழுப்புரம் அடுத்த அன்னியூர் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லுாரியில், வேதியியல் துறை சார்பில் கருத்தரங்கம் நடந்தது. கல்லுாரி முதல்வர் (பொறுப்பு) அசோகன் தலைமை தாங்கினார். ஆங்கிலத் துறை தலைவர் சின்னதுரை வரவேற்றார். பேராசிரியர் பாபு நோக்கவுரையாற்றினார். விழுப்புரம் அண்ணா அரசு கலைக்கல்லுாரி முன்னாள் வேதியியல் துறை தலைவர் பூபதி சிறப்புரையாற்றினார். கருத்தரங்கில், வேதியியல் துறை மாணவர்களுக்கான வேலை வாய்ப்புகள், மேற்படிப்புகள், அறிவியல் தேடலில் வேதியியலின் பங்களிப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினர். அப்போது, பேராசிரியர்கள் சுவாமிநாதன், ரங்கநாதன், மணவாளன், ரம்யா, ரேவதி, கிருஷ்வர், ராசு, விஜயலட்சுமி உட்பட பலர் பங்கேற்றனர். பேராசிரியர் சுமதி நன்றி கூறினார்.