இ.எஸ்., பாலிடெக்னிக்கில் கருத்தரங்கம்
விழுப்புரம்: விழுப்புரம் இ.எஸ்., பாலிடெக்னிக் கல்லுாரியில் தொழில்நெறி வழிகாட்டும் கருத்தரங்கம் நடந்தது.மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம் சார்பில் நடந்த கருத்தரங்கிற்கு, கல்லுாரி முதல்வர் சக்திவேல் வரவேற்றார். மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலர் வேல்முருகன், இளைஞர்களுக்கு அதிகாரமளிப்பதற்கான அரசு எடுத்துவரும் முயற்சிகள் மற்றும் வேலை வாய்ப்புகள் குறித்து பேசினார்.வேலை வாய்ப்பு அலுவலக வல்லுநர் நாகலட்சுமி மாணவர்கள் தேவைக்கேற்ப திறன்களைப் வளர்க்க வேண்டியதன் அவசியத்தை சுட்டிக்காட்டி பேசினார். இயந்திரவியல் துறை, மின்னியல் துறை, மின்னணுவியல் துறை, கணினி துறைகளைச் சேர்ந்த மாணவர்கள் பங்கேற்றனர்.