செஞ்சி மக்கள் நீதிமன்றத்தில் ரூ. 5.71 கோடிக்கு தீர்வு
செஞ்சி : செஞ்சியில் நடந்த மக்கள் நீதிமன்றத்தில் 5 கோடியே 71 லட்சம் ரூபாய் மதிப்பில் 325 வழக்குகள் முடித்து ைக்கப்பட்டன.செஞ்சி ஒருங்கிணைந்த நீதிமன்றத்தில் நேற்று மக்கள் நீதிமன்றம் நடந்தது. சார்பு நீதிபதி கதிரவன் தலைமையில் , கூடுதல் மாவட்ட உரிமையியல் நீதிபதி செல்வஅரிசி, குற்றவியல் நடுவர் வித்தியா ஆகியோர் வழக்குகளை விசாரணை நடத்தினர்.இதில் இரு தரப்பினர் சம்மதத்துடன் சமாதான முறையில் 92 மோட்டார் வாகன வழக்குகளுக்கு இழப்பீடாக 5 கோடியே 17 லட்சத்து 20 ஆயிரத்து 328 ரூபாய் வழங்கவும், கல்வி கடன், நிலப்பிரச்சனை, கடன் பிரச்சனை உள்ளிட்ட 233 வழக்குகளை 54 லட்சத்து 63 ஆயிரம் ரூபாய் மதிப்பிற்கும், மொத்தம் 325 வழக்குகளை 5 கோடியே 71 லட்சத்து 83 ஆயிரத்து 328 ரூபாய் மதிப்பில் முடித்து வைத்து நீதிபதிகள் உத்தரவிட்டனர்.இதில் ஏ.பி.பி. சக்திவேல், அட்வகேட் அசோசியேசன் தலைவர் கலியமூர்த்தி, பார் அசோசியேஷன் செயலாளர் அசாருதீன், பார் கவுன்சில் உறுப்பினர் கதிரவன், அரசு வழக்கறிஞர் கிருஷ்ணன் மற்றும் வழக்கறிஞர்கள், சட்டப் பணிகள் குழு அலுவலர் பூங்கொடி ஆகியோர் கலந்து கொண்டனர்.